தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

DIN

கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் வி. செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
தற்போது தினகரன் அணியில் இருக்கும் வி. செந்தில்பாலாஜி உள்பட 18 எம்எல்ஏக்களை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அண்மையில் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜி உறவினர்களின் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், குளத்துப்பாளையம், ராயனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். மொத்தம் மாவட்டத்தில் 18 இடங்களில் பல குழுக்களாகச் சென்று ஒரே நாளில் சோதனை மேற்கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரையிலும் நீடித்தது. 
இந்த சோதனையின்போது வெளிநபர்கள் யாரையும் அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா எனத் தெரியவில்லை. தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT