முகப்பு
தமிழ்நாடு

துப்பாக்கியால் சுட்டாலும் போராட்டம் ஓயாது: துரைமுருகன்

துப்பாக்கியால் சுட்டாலும் போராட்டம் ஓயாது என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 1:08 pm IST
பகிர்:

துப்பாக்கியால் சுட்டாலும் போராட்டம் ஓயாது என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே வேலூர் காட்பாடியில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது. மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதல்வர் என்றார். 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments