பள்ளி மாணவர்கள் 1,300 பேர் பிரதமருக்கு கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 1,300 பேர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 1,300 பேர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,300 பேர் அஞ்சல் அட்டை மூலம் கடிதம் அனுப்பினர். நீடாமங்கலம் தபால் நிலையம் மூலம் இந்த அஞ்சல் அட்டைகள் அனுப்பட்டன. இதுகுறித்து, மாணவர்கள் கூறியது: தங்களது பெற்றோர் விவசாயியாக இருப்பதால் காவிரி நீர் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். அதன்மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு எங்களை படிக்க வைக்க முடியும். எனவே, எங்களது எதிர்காலத்தை கருதி பிரதமர் நரேந்திரமோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.