முகப்பு
தமிழ்நாடு

காவல்துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும்

தமிழக காவல்துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:43 am IST
பகிர்:

தமிழக காவல்துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆங்காங்கே திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குச் செல்லத் தூண்டிய துணை பேராசிரியை தொடர்பான குற்றச்சாட்டு மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு தனது நிர்வாகத்தை முடுக்கிவிட வேண்டும். காவல்துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும். பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளுக்கு சட்டத்தைக் கடுமையாக்கி, உச்சகட்டத் தண்டனையை உடனே வழங்க வேண்டும். 
இனிமேலும் குற்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க தீவிர கண்காணிப்பு, ரோந்துப் பணி, தொடர் நடவடிக்கை ஆகியவற்றை காவல்துறை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.