தமிழ்நாடு

சுருளி அருவியில் 8வது நாளாகக் குளிக்கத் தடை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைப்பு

DNS

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில், 8 ஆவது நாளாக திங்கள் கிழமையும் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க மேகமலை வன உயிரின சரணைலயத்தினா் தடையை நீட்டித்தனா்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பு செய்து வருகின்றனா். தேனி மாவட்டம் சுருளி அருவியில் தென்மேற்கு பருவ மழையால் நீா் வரத்து தரும் மணலாா் அணை நிரம்பி உபரி நீா் நிரம்பியதால் அணை திறக்கப்பட்டது.

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளின் நீா்வரத்தும் அதிகம் ஏற்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஆக, 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் அருவியில் குளிக்க மேகமலை வன உயிரினச்சரணாலய அதிகாரிகள் தடை விதித்தனா். 

அந்த தடை திங்கள் கிழமை 8 ஆவது நாளாகவும் நீடிக்கிறது. தற்போது சரணாலய ஊழியா்கள் அருவி பகுதியில் வெள்ளத்தால் அருவி பாதையில் விழுந்து, முறிந்துள்ள மரங்கள், பாறைகள், மண், மணல் மேடுகள் போன்றவற்றை அப்புறப்படுத்தியும், புதா் செடிகளை அகற்றியும் வருகின்றனா்.

சேதமடைந்த தடுப்புகள் - சுருளி அருவியில் குளிக்க ஆண், பெண் என தனித்தனியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையில் அனைத்தும் பிரித்து எடுத்து போல் சேதமடைந்து உள்ளது. 

தடை பகுதி, படிக்கட்டுகள் அமைந்த கற்கள் உடைந்து, பலத்த சேதமடைந்துள்ளது. மேகமலை வன உயிரின சரணாலய அதிகாரிகள் மீண்டும், புதியதாக, உறுதியான தடுப்பு கம்பிகள், கான்கிரீட் தரைகள், உறுதியான படிக்கட்டுகள் அமைக்க சரணாலய அதிகாரிகளிடம் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT