தமிழ்நாடு

நடிகர் ரஜினிக்கு சு.திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து

DIN

இன்று பிறந்த நான் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு சு.திருநாவுக்கரசர், தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கர்நாடகாவில் ராமோசி ராவ் மற்றும் ரமா பாய்க்கு 4ஆவது குழந்தையாகப் பிறந்தார். 

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். மேலும் அவருக்கு அரசியல் தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தனது டிவிட்டர் பதிவில்,
மனிதநேயர், பண்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மேலும் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க. 

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில்,
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன் என என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT