காலமானார்: மூத்த வழக்குரைஞர் டி.ஆர்.மணி
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் டி.ஆர்.மணி (88) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.25) காலமானார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் டி.ஆர்.மணி (88) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.25) காலமானார்.
கடந்த 1930 ஆம் ஆண்டு தென்காசியில் வழக்குரைஞர் டி.எஸ்.ராமநாத ஐயரின் மூத்த மகனாக பிறந்த டி.ஆர்.மணி, சென்னை சட்ட கல்லூரியில் சட்டம் பயின்றார். கடந்த 1955-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். பதிவு செய்த ஒரு ஆண்டு காலத்துக்குள்ளேயே மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் வாதிட்டார்.
இவர் சிவில் சட்டங்கள் மற்றும் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டங்களிலும் நிபுணத்துவம் பெற்றவராக விளங்கினார். கடந்த 2002-ஆம் ஆண்டு நீதிமன்ற கட்டணம் உயர்த்தப்பட்ட போது, நீதிமன்ற கட்டண மறுஆய்வுக் குழுவில், டி.ஆர்.மணி மூத்த வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார் . மேலும் மறைந்த நீதிபதி கே.சம்பத், நீதிபதி.வெ.ராமசுப்பிரமணியன், நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் இவரது ஜூனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.ஆர்.மணி, செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ரங்காச்சாரி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
பெசன்ட் நகர் மின்மயானத்தில் வரும் வியாழக்கிழமை (டிச.27) பகல் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. தொடர்புக்கு 94452 42000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.