தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து: 22ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

DIN

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்தது. 

இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சிவகங்கையைச் சேர்ந்த இளமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், 1,33,567 பேர் தேர்வு எழுதியதில் 200 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளது. 

200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல. எனவே எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தன்னை விரிவுரையாளராக நியக்க வேண்டும் என கோரியிருந்தார். 

மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT