தமிழ்நாடு

சென்னை பல்கலை.யில் ஆன்-லைன் படிப்புகள்: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் 2018-19 கல்வியாண்டு முதல் ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஆன்-லைன் படிப்புகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், சென்னைப் பல்கலைக்கழகமும் தொலைநிலைப் படிப்புகளை ஆன்-லைனில் வழங்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கென புதிய வழிகாட்டுதல்களையும் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு இந்த வழிகாட்டுதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
அதன் மூலம், வருகிற 2018-19 கல்வியாண்டு முதல் இந்த ஆன்-லைன் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT