தமிழ்நாடு

7 மாவட்டங்களில் 104 நீர்நிலைகளில் தூர்வாரும் பணி : டிவிஎஸ் குழும அறக்கட்டளை தகவல்

DIN

டிவிஎஸ் குழுமத்தின் எஸ்எஸ்டி அறக்கட்டளை மூலம் 7 மாவட்டங்களில் 104 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். 
இது குறித்து டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சீனிவாசன் சேவை அறக்கட்டளையின் (எஸ்எஸ்டி) தலைவர் அசோக் ஜோஷி, துணைத் தலைவர் ஸ்வரண்சிங் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:-
கடந்த 1996-ஆம் ஆண்டில் 2 கிராமங்களில் நலப்பணிகளைத் தொடங்கிய எஸ்எஸ்டி அறக்கட்டளை தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு நலத் திட்டங்களை அரசு, பொதுமக்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவண்ணாமலை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பாசன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட 104 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. 
இந்தப் பணி ரூ.11.6 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. இது தவிர கூடுதல் அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டித் தருதல், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் அளித்தல், வங்கிக் கடன் பெற்றுத் தருதல் உள்பட 3,862 கிராமங்களில் பல்வேறு நலப்பணிகளை செய்துள்ளோம். இதேபோன்று ஹிமாச்சல் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT