தமிழ்நாடு

புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் பிரதமர் மோடி தியானம்

தினமணி

புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தியானம் செய்தார்.
 சென்னையில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரின் வரவேற்பை பிரதமர் ஏற்றார். பின்னர், குண்டு துளைக்காத காரில் புறப்பட்ட அவர், காலை 11 மணியளவில் அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அங்கு, அரவிந்தர், அன்னை மீரா அல்போன்ஸா ஆகியோரது சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்கள் தியானம் செய்தார்.
 அதன்பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் தங்கியிருந்த அறைகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, ஆஸ்ரமத்துக்கு அருகே உள்ள சர்வதேச ஆஸ்ரம பள்ளிக்குச் சென்றார். அங்கு தன்னை வரவேற்ற மாணவர்களின் பெயர்களைக் கேட்டறிந்தார்.
 இந்தப் பள்ளியில் பழங்கால குருகுல முறைப்படி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் நிகழ்வை பிரதமர் பார்வையிட்டார். அப்போது ஒரு வகுப்பறையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற தபேளா, புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியை பிரதமர் ரசித்தார்.
 பின்னர், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் தமிழகப் பகுதியில் உள்ள ஆரோவில் நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
 பின்னர் அங்கிருந்து சுமார் 1.45 மணியளவில் புதுச்சேரி லாஸ்பேட்டை வந்த மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினார். தொடர்ந்து விமான நிலையத்தில் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிவிட்டு, அங்கிருந்து பிற்பகல் 3.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கருணாநிதி பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

வாக்கு எண்ணிக்கையில் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு காா்கே கடிதம்

கேதாா் ஜாதவ் ஓய்வு

சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டம் ரத்து கோரிய வழக்கில் 3-ஆவது நீதிபதி நியமனம்

சென்னை மியூசிக் அகாதெமியில் கா்நாடக இசையில் ‘அட்வான்ஸ்டு டிப்ளமோ’ படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT