தமிழ்நாடு

ரஜினியைச் சந்திப்பேன்: மு.க.அழகிரி

DIN

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரைச் சந்திக்க உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகையைக் கூட இழந்தது. இதற்கு மு.க.அழகிரி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மு.க.ஸ்டாலின் செயல்பாடு சரியில்லாததன் காரணமாகவே திமுக தோல்வி அடைந்ததாகவும் அழகிரி தெரிவித்தார். இது திமுகவினர் மத்திய பெரும் சலசலப்பை உருவாக்கியது.
இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்துக்கு மு.க.அழகிரி புதன்கிழமை காலை வந்தார். திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.அழகிரி, கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் ரஜினியைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாகவும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் கூறினார். ரஜினியும் அழகிரியும் நல்ல நண்பர்கள். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ரஜினியை நேரில் சந்தித்து நடந்த விவரங்களை எல்லாம் அவரிடம் அழகிரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT