தமிழ்நாடு

மரங்களை வளர்க்கும் மாணவருக்கு கூடுதல் மதிப்பெண்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

மரங்களை வளர்க்கும் மாணவருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நாளந்தா கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் உள்ள முழு நேர நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 193 நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 123 நூலகங்களும் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளன. 5 மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்பர். 
கடந்தாண்டில் கல்வித் துறையில் அறிவிக்கப்பட்ட 42 திட்டங்களில் 40 திட்டங்களைச் செயல்படுத்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 2 திட்டங்களுக்கான ஆணை ஓரிரு நாளில் வழங்கப்படும். 
பணி நிரந்தரம் இல்லை: பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் நிலவும் குளறுபடிகளைக் களையும் வகையில் 2 நாள்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 2012, 13,14-ஆம் ஆண்டுகளில் பயிற்சி முடித்த 94 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையை மாற்றி எதிர்காலத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பேரவைக் கூட்டத்தில் கல்வித் துறையில் புரட்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படும். கூடுதலாக 512 தேர்வு மையங்கள் 10 கி.மீட்டர் தொலைவுக்குள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன என்றார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT