தமிழ்நாடு

சூறாவளிக் காற்றுடன் கன மழை: கூடலூர் அருகே வாழை மரங்கள் சேதம்

DIN

கூடலூரை அடுத்துள்ள பாலம்வயல் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்ததால் வாழைத் தோட்டங்கள் திங்கள்கிழமை பெருத்த சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாலம்வயல் பகுதி அரிக்கோடு வயல் பகுதியில் உவைத், ரவி, ரியாஸ், சதீஷ் ஆகியோர் தங்கள் நிலங்களில் நேந்திரன் வாழை பயிரிட்டிருந்தனர். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் அப்பகுதியில் திங்கள்கிழமை சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், வாழை மரங்கள் முறிந்து விழுந்து பெருத்த சேதமடைந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT