தமிழ்நாடு

ஏற்காட்டில் சாரல் மழை, பனி மூட்டம்

DIN

ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு நாள்தோறும் அரசுத் துறை அலுவலர்கள் , வங்கி அலுவலர்கள், ஆசிரியர்கள், கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என சேலத்திலிருந்து பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஏற்காடு மலைப் பாதையில் அவ்வப்போது மழை பெய்வதாலும், பனிமூட்டம் ஏற்படுவதாலும் வாகனங்களில் வந்து செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மலைப் பாதையில் வாகனம் ஓட்ட முடியாமல் மெதுவாகச் செல்கின்றனர்.
தற்போது தொடர் மழை பெய்வதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பகுதியிலுள்ள கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மழையின் காரணத்தால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT