தமிழ்நாடு

ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை?: சென்னை சிறுமி சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஆவேசம்

DIN

சென்னை: சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மாற்றுத்திறனாளியான 11 வயதுச் சிறுமி 17 பேரால், கடந்த 7 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மாநிலத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஒரு சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது இருக்கட்டும். அந்த 17 பேரில் ஒருவனுக்குக் கூடவா மனசாட்சி இல்லை. இது ஒரு தேசிய சோகம் அல்லவா?

இவ்வாறு வைரமுத்து வேதனை பொங்கத் தெரிவித்துளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT