முகப்பு
தமிழ்நாடு

கந்தன்சாவடியில் சாரம் சரிந்த விபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையின் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக

Updated On : 23 ஜூலை 2018, 9:27 am IST
பகிர்:


சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையின் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கான செலவை அரசு ஏற்கும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த விபத்தின்போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகளில் பப்லு (23) என்பவர் உயிரிழந்தார். 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மீதமுள்ள 27 பேரில் 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 16 பேர் அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், "பலத்த காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசு ஏற்கும்' என முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

 எனவே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அங்கிருந்து மாற்ற வேண்டாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தரமணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கட்டுமான பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 இவ்வழக்கில், பொறியாளர்களான ஈரோட்டை சேர்ந்த முருகேசன் (52), விருதுநகரை சேர்ந்த சிலம்பரசன் (28) ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிகாரை சேர்ந்த ராஜன் சுவுத்ரி என்ற மற்றொரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments