முகப்பு
தமிழ்நாடு

கிறிஸ்டி நிறுவன உரிமையாளரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை

வருமானவரி ஏய்ப்பு குறித்து கிறிஸ்டி நிறுவன உரிமையாளரிடம், சென்னையில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

Updated On : 24 ஜூலை 2018, 2:14 am IST
பகிர்:

வருமானவரி ஏய்ப்பு குறித்து கிறிஸ்டி நிறுவன உரிமையாளரிடம், சென்னையில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிறிஸ்டி நிறுவனம் சத்துமாவு, முட்டை, பருப்பு
உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாகவும்
வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அந்த தனியார் நிறுவனத்திலும், அந்த நிறுவனத்துடன் பணத் தொடர்பு வைத்திருக்கும்
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், வணிக தொடர்பு வைத்திருக்கும் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலும் கடந்த 5-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொண்டனர்.
இச்சோதனை சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், புது தில்லி என மொத்தம் 76 இடங்களில் நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சுதாதேவியிடமும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.
5 நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில், கணக்கில் வராத ரூ.17 கோடி ரொக்கம், 10 கிலோ தங்கம், 50க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஹார்டிஸ்குகள், மடி கணினிகள், 100 பென்டிரைவகள் ஆகியவற்றை
பறிமுதல் செய்ததாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர். சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை மதிப்பீட்டதில், அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.1,350 கோடி வரை
வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டது.
3 மணி நேரம் விசாரணை: இந்நிலையில் வருமானவரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி உள்பட பலருக்கு அழைப்பாணை வருமான
வரித் துறையின் சார்பில் அனுப்பப்பட்டது. 
அதன்படி, கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ஆஜரானார். அவரிடம்,
வரி ஏய்ப்பு தொடர்பாகவும், அவரது வீடு, அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் குறித்தும் குமாரசாமியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றதாகத் தெரிகிறது.
அடுத்தகட்டமாக கிறிஸ்டி நிறுவனத்தின் நிர்வாகிகள், கிறிஸ்டி நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் நடத்தப்படும் என வருமானவரித் துறையினர்
தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments