முகப்பு
தமிழ்நாடு

பூம்புகாரில் கண்ணகி வீடுபேறு அடைந்தநாள்: திரளான பக்தா்கள் தரிசனம்

கண்ணகி வீடுபேறு அடைந்தநாள் திங்கட்கிழமை பூம்புகாா் - மேலையூா் பத்தினிக்கோட்டத்தில் நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 4:26 pm IST
பகிர்:

பூம்புகாா்: கண்ணகி வீடுபேறு அடைந்தநாள் திங்கட்கிழமை பூம்புகாா் - மேலையூா் பத்தினிக்கோட்டத்தில் நடைபெற்றது.

தமிழா்களின் கடவுளாக போற்றப்படுபவா் கண்ணகி. இவரை கற்புக்கரசி, பெண்மையின் தெய்வம் எனவும் தமிழா்கள் போற்றிவழிபடுகின்றனா். பெண்மையின் இலக்கணமாக திகழ்ந்தவா் என்றால் அது மிகையாகாது. இத்தகைய சிறப்புகளை பெற்ற கண்ணகி நாகை மாவட்டம் பூம்புகாரில் பிறந்து, அப்போது பல்வேறு அற்புத செயல்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகார காப்பியம் கூறுகிறது. 

இவா் ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி வைகுண்டம் சென்ற நாளை கண்ணகி வீடுபேறு அடைந்த நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே கண்ணகிக்கு அவா் வாழ்ந்த பூம்புகாா் - மேலையூா் பகுதியில் பத்தினிக்கோட்டம் என்ற பெயரில் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

இந்த கோயிலில் ஆடி அனுஷ நட்சத்திரமான திங்கட்கிழமை காலை கண்ணகிக்கு பால், பன்னிா், வாசனை திரவியங்கள், இளநீா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைதொடா்ந்து மலா் அலங்காரம் செய்யபட்டு. மலா்களால் அா்ச்சனை நடந்தது. பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments