முகப்பு
தமிழ்நாடு

முல்லைத்தீவில் கிணறு தோண்டியபோது ராக்கெட் குண்டு, ஆயுதங்கள் கண்டெடுப்பு

இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கிணறு தோண்டியபோது ராக்கெட் குண்டுகள், கண்ணி வெடி உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கின. இதனை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி திங்கள்கிழமை

Updated On : 24 ஜூலை 2018, 4:53 am IST
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கிணறு தோண்டியபோது கிடைத்த ராக்கெட் குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை திங்கள்கிழமை பார்வையிட்ட அந்நாட்டு கடற்படையினர். 
பகிர்:

இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கிணறு தோண்டியபோது ராக்கெட் குண்டுகள், கண்ணி வெடி உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கின. இதனை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி திங்கள்கிழமை விசாரணையை தொடங்கி உள்ளனர். 
இலங்கை முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் வெள்ளிக்கிழமை கிணறு தோண்டும் பணிக்காக சுத்தம் செய்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் கிடந்துள்ளன. தகவலறிந்து அங்கு வந்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கிணற்றை ஆய்வு செய்தபோது சக்தி வாய்ந்த வெடி பொருள்கள் இருப்பது தெரியவந்தது. 
இது தொடர்பாக நீதிமன்றம், கிணற்றை கடற்படை சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களின் மேற்பார்வையில் வெடி பொருள்களை எடுக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, வடக்கு பிராந்திய கடற்படை அதிகாரி விக்ரம் சிங்க தலைமையில் சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படையினர், வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் கிணற்றை தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 
அதில் இருந்து ராக்கெட் குண்டுகள், கண்ணிவெடி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டன. திங்கள்கிழமை மாலை ஏராளமான வெடி பொருள்களை கடற்படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வெடி பொருள்கள் அனைத்தும் விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தியதாக இருக்கலாம் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments