ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்
ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி ஒரு உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எம்.துரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகிறார். அதே வேளையில் நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்ட தேஷ்முக் சேகர் சஞ்சய், ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.