தமிழ்நாடு

நீலகிரி மலை ரயில் கட்டணங்கள் திடீர் உயர்வு

DIN

நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 
இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்களை உயர்த்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. நாட்டில் 5க்கும் குறைவான ரயில்களில் மட்டுமே ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலான மிகக் குறைந்த கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நவீன இருக்கைகள், வை-ஃபை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாலும், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களாலும் அனைத்து ரயில்களுக்கும் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் நஷ்டத்தில் இயங்குவதாகவும், ஆண்டுக்கு ரூ.24 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய ரயில் சேவை என்பதால் நஷ்டம் ஏற்பட்டாலும் இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவதே பெருமையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மலை ரயிலுக்கு உயர்த்தப்படவுள்ள கட்டண விவரம் வருமாறு(பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்):
மேட்டுப்பாளையம்-உதகை: முதல் வகுப்பு (ரூ.195) ரூ.395, இரண்டாவது வகுப்பு (ரூ.30) ரூ. 130, முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு (ரூ.15) ரூ.75.
மேட்டுப்பாளையம்-குன்னூர்: முதல் வகுப்பு (ரூ.174) ரூ.295, இரண்டாம் வகுப்பு (ரூ.25) ரூ.65, முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு (ரூ.10)ரூ.45.
குன்னூர்-உதகை: முதல் வகுப்பு (ரூ.140) ரூ. 225, இரண்டாம் வகுப்பு (ரூ.25)ரூ.70, முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு (ரூ.10) ரூ.35.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT