தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கை சிபிஐ விசாரித்தால் சரியாக இருக்கும்: தலைமை நீதிபதி கருத்து

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்துத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, வழக்குரைஞர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மே 22 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது? இந்தச் சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவும், அந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தமிழக போலீஸாருக்கு எதிரானது. அப்படி இருக்கும்போது மாநில போலீஸாரே இதுகுறித்து விசாரிப்பதைவிட, சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் சரியாக இருக்கும்' என கருத்துத் தெரிவித்தார். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT