தமிழ்நாடு

தனியார் பள்ளிக் கட்டணங்களை ஏப்ரல் 30க்குள் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

DIN


மதுரை: தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை உடனடியாக நிர்ணயித்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரி ஹக்கிம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 10,000 தனியார் பள்ளிகளில் இதுவரை 5,500 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4500 பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரியும், அனைத்துப் பள்ளிகளுக்கும் உடனடியாக கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை, தனியார் பள்ளியின் கட்டண விவரங்களை நிர்ணயித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT