தமிழ்நாடு

சாலையின் குறுக்கே செல்லும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது: வனத் துறை எச்சரிக்கை 

தினமணி

சாலையின் குறுக்கே செல்லும் யானைகளைத் தொந்தரவு செய்யக் கூடாது என வனத் துறை எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் உள்ளன.
தற்போது வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள்அடிக்கடி வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன. ஆசனூர் வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அங்குள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப் பகுதி சாலையோரம் திரிகின்றன. 
குறிப்பாக, ஆசனூர் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. அவ்வாறு சாலையோரங்களில் திரியும் யானைகளை அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள், ஆபத்தை உணராமல் செல்லிடப்பேசி, கேமரா மூலம் படம் எடுக்கின்றனர்.
இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
ஆசனூர் வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு தேடி சாலையோரம் சுற்றித் திரிகின்றன. அவ்வாறு திரியும் யானைகள் ஆசனூரில் உள்ள திண்டுக்கல் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கின்றன. 
எனவே, அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வனவிலங்குகளைக் கண்டால் தங்களுடைய வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும். மேலும், சாலைகளைக் கடக்கும் யானைகளைத் தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது வனத் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT