தமிழ்நாடு

திரைப்படக் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

DIN

திரைப்படக் கல்லூரியில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆறு வகையான பட்டப் படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளங்கலை ஒளிப்பதிவு, இளங்கலை எண்மிய இடைநிலை, இளங்கலை ஒலிப்பதிவு, இளங்கலை இயக்குதல் மற்றும் திரைக்கதை, இளங்கலை படத்தொகுப்பு, இளங்கலை அனிமேஷன் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்லூரியில் வியாழக்கிழமை (மே 10) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை www.tn.gov.in  http://www.tndipr.gov.in/television/traininginstitute.aspx  ஆகிய இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT