தமிழ்நாடு

தூத்துக்குடி சம்பவம்: தமிழக அரசுக்கு ராகுல் கடும் கண்டனம்

DIN

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய போராட்டக்காரர்கள் மீது போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்றுவரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை 100}ஆவது நாளை எட்டியது. இதையொட்டி, அந்த ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நேரிட்ட வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸôர் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு ராகுல் காந்தி சுட்டுரையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழகத்தில் அநீதிக்கு எதிராகப் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக அரசு பயங்கரவாதத்தை ஊக்குவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT