கள்ளக்கதையில் கள்ள ஓட்டு பற்றி படமெடுக்கிறார்கள்: சர்கார் படத்தை மறைமுகமாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்
கள்ளக்கதையில் கள்ள ஓட்டு பற்றி படமெடுக்கிறார்கள் என சர்கார் படத்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கள்ளக்கதையில் கள்ள ஓட்டு பற்றி படமெடுக்கிறார்கள் என சர்கார் படத்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கதை திருட்டு, நீதிமன்றத்தில் சமரசம் என அன்றாட செய்திகளில் ஒன்றாகி போன விஜய்யின் "சர்கார்' தீபாவளிக்கு வருகிறது. நடிகர் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு பெரும் ஹிட் அடித்தது. முன்னதாக இப்படத்தில் நடிகர் விஜய் முதல்வராக நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தான் அவ்வாறு நடிக்கவில்லை என மறுத்தார் விஜய்.
Advertisement
Advertisement
"சர்கார்' அரசியல் தொடர்பான படம் என்பதால், இது தொடர்பான விஷயங்கள் வெளியில் கசியாமல் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கதை விவகாரம் நீதிமன்றம் வரையிலும் வந்ததால், இந்தப் படத்தின் கருப்பொருளை பற்றி அனைவராலும் யூகிக்க முடிகிறது. வெளிநாட்டிலிருந்து ஓட்டு போட வரும் விஜய்யின் ஓட்டை, யாரோ கள்ள ஓட்டு போட்டு விடுகின்றனர். அதன் விளைவாக அரசியலுக்குள் தள்ளப்படும் விஜய், இறுதியில் எடுத்த முடிவுகள் என்ன என்பதே திரைக்கதை. தீபாவளிக்கு வரும் படங்களில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது "சர்கார்'.
இந்நிலையில் சர்கார் படத்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் கூறுகையில், கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கிறார்கள். முதல்வர் கனவுகளோடு நடிப்பவர்கள் திரையில்தான் ஆட்சி செய்ய முடியும். இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி இல்லை, காமன்மேன்களுக்கான ஆட்சி. சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.