தமிழ்நாடு

பெங்களூரு சிறையில் சசிகலா  -  டிடிவி தினகரன் சந்திப்பு

DIN

பெங்களூரு: பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா தற்போது பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சிறையில் இருந்த இளவரசி தற்போது பரோலில் வெளியில் இருக்கிறார். எனவே சசிகலாவும் சுதாகரனும் மட்டுமே சிறையில் உள்ளார்கள். 

அதிமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலகக்குரல் எழுப்பிய டிடிவி தினகரன் தலைமையிலான 18 எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று டிடிவி தினகரன் தரப்பு அறிவித்து விட்டதன் காரணமாக இந்த 18 தொகுதிகளையும்சேர்த்து மொத்தம் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.    

இந்நிலையில் பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். 

டிடிவி தினகரனுடன் தகுதி நீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏக்களான ரத்ன சபாபதி, செந்தில் பாலாஜி, வெற்றிவேல், வகைச்செல்வன் மற்றும் பழனியப்பன் ஆகியோரும்  உடனிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT