தமிழ்நாடு

ரெளடி கும்பல்களின் எண்ணிக்கை விவரங்களை கேட்கிறது உயர்நீதிமன்றம்

DIN


தமிழகம் உள்பட நாடு முழுவதும் எத்தனை ரெளடி கும்பல்கள், கூலிப்படைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ரௌடி வேலு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் மத்திய அரசின் உள்துறைச் செயலர், தமிழக காவல் துறை டிஜிபி ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கிறோம். 
தமிழகம் உள்பட நாடு முழுவதும் எத்தனை ரெளடி கும்பல்கள் மற்றும் கூலிப் படைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன, இந்த கும்பல்களைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, எத்தனை கொலைகள் நடந்துள்ளன, எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, சென்னையில் இந்த கும்பல்களால் ஏற்படும் தாக்கம் என்ன, எத்தனை ரெளடிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, போலீஸ் உயர் அதிகாரிகளின் துணையோடு இயங்கி வரும் ரெளடி கும்பல்கள் எத்தனை, அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி கொண்டவர்களை தங்களது கட்சியின் நிர்வாகிகளாக நியமித்துள்ளனவா என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்தக் கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வரும் 30 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமகிரிப்பேட்டை பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

எஸ்ஆா்வி ஆண்கள், ஹைடெக் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சென்னையில் ரஷ்ய கல்விக் கண்காட்சி தொடங்கியது

உதகை மலா் கண்காட்சியில் லேசா் லைட் ஷோ

SCROLL FOR NEXT