தமிழ்நாடு

கஜா புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு: அமைச்சர் தங்கமணி

DIN


கஜா புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. 46 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மரங்கள், விவசாய பயிர்கள், வீடுகள், மீன்கம்பங்கள் சேதமடைந்துள்ளன, கால்நடைகள், வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. 

அரசு சார்பில் அமைச்சர்கள் மேற்பார்வையில் விரைந்து மறு சீரமைப்புப் பணிகளில் அரசு பணியாளர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், புயல் பாதிப்பை கருத்தில் கொண்ட முன்கூட்டியே போதிய அளவு மின் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

கிராமப்பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் தடையின்றி வழங்கப்படும். நகர் புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு தர விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கஜா புயலால் மின் துறைக்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT