தமிழ்நாடு

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர தகுதிச்சான்று: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

DIN

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தாமரைச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது பள்ளிப்படிப்பை தமிழகத்தில் முடித்து, மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் படித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொள்ளவும், தமிழக மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யவும் தன்னை அனுமதிக்க வேண்டும்' என கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "இந்தியாவில் 90 சதவீத மதிப்பெண் பெற்றவர்களே மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தச் சூழலில் பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் கூட, அதிகமான தொகையை செலவழித்து வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்கின்றனர். எனவே, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று  வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேர 80 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலக் தடை விதித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 17 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

SCROLL FOR NEXT