தமிழ்நாடு

அக்டோபர் 8ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

அக்டோபர் 8ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 8ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்னதாகவே தொடங்கவுள்ளது. 

வரும் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி ஓமன் நாட்டிற்கு செல்லும். இதனால் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும். 

ரெட் அலர்ட் பாதிப்பு எதுவும் இல்லை, கனமழை பெய்யும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 13 செமீ, செங்கல்பட்டு 12 செமீ, சோழவரம் 9 செமீ மழைப் பதிவாகியுள்ளது. மீனவர்கள் இன்று முதல் 8ஆம் தேதி வரை கச்சத்தீவு, மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT