தமிழ்நாடு

சென்னையில் மீன் விலை சரிவு

தினமணி

புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து சென்னையில் மீன் விலை குறைந்து வருகிறது.
 ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்களில் பெரும்பாலோர் அசைவ உணவைத் தவிர்த்து விடுவது வழக்கம். இவ்வாண்டு கடந்த 17-ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. இதையடுத்து பெரும்பாலானோர் அசைவ உணவைத் தவிர்த்து வருவதால் மீன், இறைச்சி போன்றவற்றின் விற்பனை குறைந்து அவற்றின் விலை சரிந்து வருகிறது.
 வஞ்சிரம் மீன் விலை சற்று குறைந்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மாதம் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று மேலும் சில வகை மீன்கள் கிலோ ரூ.50 முதல் 200 வரை குறைந்துள்ளன. சங்கரா ரூ.150-க்கும், கட்லா ரூ.200-க்கும், சுறா ரூ.350-க்கும், இறால் ரூ.300-க்கும், நண்டு ரூ. 250-க்கும், வவ்வால் ரூ.500-க்கும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT