தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என். சேட்டு நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என். சேட்டு நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என். சேட்டு நியமிக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் நந்தினி உட்பட 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நேர்மையில்லாமல் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்மையாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

புற்றுநோய் போல சமூகத்தில் ஊழல் பரவுகிறது. உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில், ஊழல் செய்து முதல்வராக நியமனம் பெற்று பாவம் இழைக்கிறார்கள் என்றும் நீதிபதி தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT