தமிழ்நாடு

குற்றாலத்தில் குவிந்த பயணிகள்

DIN

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக, பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் விழுகிறது.

சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. பேரருவியில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரலும், குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT