தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தலைமைச்செயலாளருடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

DIN

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளருடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை டிசம்பா் 6-இல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

தலைமைச்செயலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலாளர் சுப்பிரமணி, ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT