ஐசிஏஐ புதிய தலைவராக பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு
இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவன (ஐசிஏஐ) புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கணக்குத் தணிக்கையாளர்
இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவன (ஐசிஏஐ) புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கணக்குத் தணிக்கையாளர் அதுல் குமார் குப்தா தேர்வாகியுள்ளார்.
இதுதொடர்பாக ஐசிஏஐ வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஐசிஏஐ கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ஐசிஏஐ-க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, ஐசிஏஐ-யின் 2019-20 ஆம் ஆண்டுக்கான 67 -ஆவது தலைவராக மும்பையைச் சேர்ந்த கணக்குத் தணிக்கையாளர் பிரஃபுல்லா சாஜத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஐசிஏஐ- கணக்கு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வங்கி வாரியங்களில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
அதுபோல, இதன் துணைத் தலைவராக தில்லியைச் சேர்ந்த கணக்குத் தணிக்கையாளர் அதுல் குமார் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப் படிப்பையும் மேற்கொண்டிருக்கும் அவர், சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவிலான ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றவர்.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இவர் அங்கம் வகித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.