முகப்பு
தமிழ்நாடு

மின்பணியின் போது உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின்சாரப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிவாரண நிதி அறிவித்தார். 

Updated On : 14 பிப்ரவரி 2019, 1:43 am IST
பகிர்:


நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின்சாரப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிவாரண நிதி அறிவித்தார். 
இதுகுறித்து, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர் மதிவாணன் புதன்கிழமை விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில்:
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம். மின் கம்பம் நடும் பணிக்கு அந்த வழியே சென்று கொண்டிருந்த சரவணனை துணைக்கு அழைத்தார். மின்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராமல் மின்சாரம் தாக்கிய விபத்தில் சரவணன் உயிரிழந்தார்.
அவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.