இலங்கை நெடுந்தீவு அருகே தொண்டி மீனவர்கள் 9 பேர் கைது
திருவாடானை அருகே தொண்டி நம்புதாளையைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கூறி சிங்கள கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து இலங்கை கொண்டு சென்றனர்.
திருவாடானை அருகே தொண்டி நம்புதாளையைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கூறி சிங்கள கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து இலங்கை கொண்டு சென்றனர்.
தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான நாட்டுப் படகில் அதே ஊரைச் சேர்ந்த செல்வேந்திரன் (40), ராம்குமார் (43), பெரியசாமி (50), கோவிந்தராஜ் (45), காளிதாஸ் (49)ஆகிய 5 பேரும், மற்றொரு படகில் நம்புதாளையைச் சேர்ந்த மயில் நாட்டு படகில் அதே ஊரை சேர்ந்த வசி (18), நாகராஜ் (45), ராமு (32), அபிமன் (18) ஆகிய நான்கு பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 9 பேரையும் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்து 2 நாட்டுப்படகு களையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த நம்புதாளை மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.