முகப்பு
தமிழ்நாடு

கூட்டணி பேச்சுவார்த்தை: அதிமுகவில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 5 பேர்

Updated On : 24 ஜனவரி 2019, 1:33 am IST
பகிர்:


மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவை நியமித்து முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:
மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்படுகிறது.
கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய 5 பேர் குழுவில் இடம்பெறுவர் என்று கூறியுள்ளனர். அதைப்போல மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவையும் முதல்வரும், துணைமுதல்வரும் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம்: அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செ.செம்மலை, பி.எச்.மனோஜ்பாண்டியன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரவி பெர்னார்ட் ஆகிய 7 பேர் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பர் எனவும் அறிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.