தமிழ்நாடு

அரசு ஊழியர்களின் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

DIN

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியது:

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

அதைப்போல, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதன் மூலம், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 20 லட்சம் பேர் பயன்பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT