தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

DIN

சென்னையின் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் வருகை தந்தனர். 

அப்போது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வந்தடைந்தார். அங்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரைச் சந்தித்து வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மேலும் அக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டணி ஒப்பந்தம் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT