தமிழ்நாடு

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் கூறியதுதான் அரசின் கருத்து: நிர்மலா சீதாராமன்

DIN

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் கூறியதுதான் அரசின் கருத்து என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்தியா பலமுறை வலியுறுத்தியும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததாலேயே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் கூறியதுதான் அரசின் கருத்து. விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரமாக சாட்டிலைட் புகைப்படம் உள்ளதா என்பது பற்றி தெரிவிக்க இயலாது. அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள்.

நாளை பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்களா என நான் கருத்துகூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT