தமிழ்நாடு

அதிமுக அரசு தொடர அங்கீகாரம்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

DIN

அதிமுக அரசு தொடர தமிழக மக்கள் அளித்த அங்கீகாரமாகவே தேர்தல் முடிவை எடுத்துக் கொள்கிறோம் என்று  மீன்வளத் துறை அமைச்சர் 
டி.ஜெயக்குமார் தெரிவித்தார். 
இதுகுறித்து, சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 
இந்தத் தேர்தலைப் பொருத்தவரை ஏற்கெனவே கூறியபடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தொடர்வதற்கு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த துரைமுருகன், ஜூன் 3-ஆம் தேதி தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் என்றார். அப்போது நான் சவால் விட்டேன். அப்படி ஆட்சி அமையாவிட்டால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயாரா எனக் கேட்டேன். இப்போது ஆட்சி அமையாத பட்சத்தில் அவர் ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கிறேன்.
தமிழக மக்கள் எங்கள் ஆட்சிக்குக் கொடுத்த அங்கீகாரமாகவே தேர்தல் முடிவை எடுத்துக் கொள்கிறோம். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை ஆர்.கே.நகரில் ஒரு மாய மனித
ராக இருந்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகரை வளைத்தது போன்று தமிழகத்தை வளைக்கலாம் என பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்தார். ஆனால், படுதோல்வி அடைந்துள்ளார். வாக்காளர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நபராக டிடிவி தினகரன் உள்ளார் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT