முகப்பு
தமிழ்நாடு

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த நிதின் கட்கரி அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி 

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  

Updated On : 26 மே 2019, 11:57 am IST
பகிர்:

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  

16-ஆவது மக்களவையில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் நிதின் கட்கரி. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த நிலையில், செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்த நிதின் கட்கரி, மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றவுடன், கோதாவரி- கிருஷ்ணா- காவிரி நதிகளை இணைக்கும் திட்டமே முதல் பணியாக இருக்கும். 

இந்தத் திட்டத்தால் தமிழகத்துக்கு நீரைக் கொண்டு சேர்க்க முடியும் என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரிக்கு நீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், இந்தத் திட்டம் குறித்து இப்போது நிதின் கட்கரியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிதின் கட்கரியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

மேலும், இத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காத நிலையில், கோதாவரி- கிருஷ்ணா இணைப்புத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு போதிய நீரைக் கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து முதலவர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டரில்,
கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பால் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை தீரும். இக்கட்டான சூழலில் இந்தத் திட்டம் தமிழகத்துக்கு அவசியம் தேவை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments