வேதாரண்யத்தில் கடல் சீற்றம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசுவதுடன், கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல்காற்று வழக்கத்தைவிட வேகமாக வீசுவதுடன், கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம் பகுதியில் தெற்கு திசையில் இருந்து வீசிவரும் கடல்காற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து அதிகரித்து காணப்படுகிறது. வேகமாக வீசும் காற்றில் மணல்துகள்களும் பறந்து வருவதால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக உள்ளதால், வேதாரண்யம், புஷ்பவனம், வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகட்டுத்துறை, கோடியக்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.