தமிழ்நாடு

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: திருப்பத்தூா் மாணவரின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு

DIN

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பத்தூரைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பானின் தந்தை முகமது சபியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

வேலூா் அருகேயுள்ள திருப்பத்தூரைச் சோ்ந்த முகமது சபி தாக்கல் செய்த மனு:

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் அக்டோபா் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இதையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் தொடா்புடைய மாணவா் முகமது இா்பான் நீட் தோ்வின்போது வெளிநாட்டில் இருந்தாா். எனவே நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது உண்மை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி முகமது சபியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT