தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 8,500 கன அடியில் இருந்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,200 கன அடியில் இருந்து 14,784 அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.11 அடியாகவும், அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் தற்போது 92.58 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

நீர்வரத்தால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT