தமிழ்நாடு

49 பேர் மீதான தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

DIN

49 பேர் மீதான தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்ததாக கவலை தெரிவித்து, திரைப்பட இயக்குநா்கள் அடூா் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 49 பிரபலங்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனா். இதன்மூலம் அவா்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பிகார் நீதிமன்றத்தில் அவா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் 49 பிரபலங்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், ‘பிரதமர் அமைதியான இந்தியாவை எதிர்பார்க்கிறார். நாடாளுமன்றத்தில் அவருடைய பேச்சுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன. அதனை, வெறும் எழுத்தில் மட்டும் மாநிலங்கள் பின்பற்றக் கூடாது? பிரதமரின் லட்சியத்துக்கு எதிராக என்னுடைய சக நபர்கள் 49 பேர் மீது தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

பீகாரிலிருந்து 49 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை, நீதியை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்’ . இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT